Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
ஹோலி கொண்டாட்டத்தில் வாலிபர் ஒருவர் உற்சாகத்தில் செய்த காரியம் இறுதியில் அவரது உயிரையே பறித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்துக்களின் பண்டிகையாக கொண்டாடப்படும் ஹோலி கடந்த 18ம் தேதி பயங்கர கொண்டாட்டத்துடன் அரங்கேறியது.
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் இந்தூரில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேசத்தில் 38 வயது வாலிபர் தனது நண்பர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தினை கொண்டாடியுள்ளார். அப்போது அவர்களுடன் சேர்ந்து பயங்கரமாக நடனமாடியுள்ளார்.
தனது நண்பர்களுடன் உற்சாகமாக நடனமாடிய குறித்த நபர் தனது கையில் சிறு கத்தி ஒன்றினை வைத்துள்ளார். பாடலை போட்டு பயங்கர உற்சாகமாக நண்பர்களுடன் நடனமாடியவர் கையில் இருந்த கத்தியை மறந்துவிட்டார்.
நடனமாடியவாறே தனது மார்பில் கத்தியைக் கொண்டு நான்கு முறை தெரியாமல் குத்தியுள்ளார். பின்பு ரத்தம் வருவதை அவதானித்த பின்னரே வலி தெரிந்துள்ளது.
உடனே உறவினர்கள் நண்பர்கள் பதற்றத்துடன் அவரிடம் வந்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் குறித்த இளைஞரோ வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.