கிளிநொச்சி மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கிளிநொச்சி மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கிளிநொச்சி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ள மனித எச்சங்கள் தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பணியாளர்களினால் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், மற்றும் மின்கலங்கள் போன்றவை மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.