Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் நல்ல மாப்பிள்ளை, பொண்ணைத் தேடிக் கண்டுபிடிக்க குடும்பத்தினர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். ரொம்பவும் அதற்காக மெனக்கெடவும் செய்கின்றனர்.நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து திருமணமும் செய்து வைக்கின்றனர். ஆனால் இவ்வளவும் செய்தாலும்கூட திருமணம் மாப்பிள்ளை, பெண்ணின் தன்மை மற்றும் குணநலனால் மட்டுமே சிறக்கும். அது இல்லாத நேரங்களில் மணவாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். என்னதான் பெரியவர்கள் பார்த்து, பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் சில நேரங்களில் தம்பதிகளின் மனம் ஒத்துப்போகா விட்டால் வாழ்க்கையே கசந்துவிடும்.
திருமணத்திற்கு பின்பு நான்கைந்து மாதங்கள் கடந்து மணமக்களுக்குள் சண்டை வருவதெல்லாம் சகஜமான ஒன்றுதான். ஆனால் இங்கே கல்யாண மாப்பிள்ளை கொஞ்சம் லேட்டாக வந்திருக்கிறார். உடனே, கல்யாணப் பெண் டென்ஷனின் உச்சத்திற்கே போய்விட்டார். தாலி கட்டியதும், சம்பிரதாயத்திற்காக மணமக்கள் தங்களுக்குள் தங்களுக்குள் பால், பழம் கொடுப்பது வழக்கம்.
மாப்பிள்ளை பெண்ணிற்கு தாலி கட்டிவிட்டு பழம் கொடுக்க மணப்பெண்ணோ அதைக் கோபத்தோடு தூக்கி வீசிவிட்டார். பதிலுக்கு மணப்பெண் டம்ளரில் பால் கொடுக்க அதை மாப்பிள்ளை டம்ளரோடு தூக்கி வீசிவிட்டார். எப்படித்தான் இவர்கள் சேர்ந்து வாழப் போகிறார்களோ? என நெட்டிசன்கள் இதை கலாய்த்து வருகின்றனர். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.
தாமதமாக வந்த மாப்பிள்ளை! தாறுமாறாக பாடம் கற்பித்த மணப்பெண் pic.twitter.com/0EKEmo7Z6A
— பவித்திரா (@Pavithra19913) March 4, 2022