Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
பொதுவாகவே காட்டுக்கு ராஜா என்றால் சிங்கம் தான். சிங்கத்தின் சப்தத்தை அதனால் தான் கர்ஜனை என்கிறோம். அதுமட்டும் இல்லாமல் சிங்கம் கம்பீரமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சிங்கக் கூட்டத்தையே எருமை மாடுகள் சேர்ந்து விரட்டி அடித்திருக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.பள்ளிக்கூடத்தில் ஒரு கதை படித்திருப்போம். நான்கு மாடுகள் ஒற்றுமையாக இருந்தன. அந்த மாடுகளை வேட்டையாடி சாப்பிட ஆசைப்பட்ட சிங்கக் கூட்டம் ஒன்று அந்த மாடுகளுக்குள் சண்டை ஏற்படுத்தி அவைகளைப் பிரித்ததையும், மாடுகள் தனித்து வந்ததும் வேட்டையாடி சாப்பிட நினைப்பதையும் இந்தக் கதை பேசும். இப்போது அதேபோலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது.
காட்டுக்குள் இப்படியொரு காட்சியை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள். காட்டுயிர் புகைப்படக் கலைஞர்கள் சிலர் கானகத்தில் புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தனர். அவர்கள் தான் இப்படியொரு காட்சியைப் பார்த்தனர். எருமைக் கூட்டம் ஒன்று பாகுபலி படத்தில் வருவது போல் மின்னல் வேகத்தில் ஓடிவந்தது. அப்போது அங்கே நின்ற மூன்று சிங்கங்கள் வசமாக எருமைக் கூட்டம் பார்க்காத தருணத்தில் தனியாக வந்த இரு எருமை மாடுகளை அடித்துப் போட்டது. இதை கவனித்துவிட்ட எருதுக்கூட்டம் நெருங்கி வருவதைப் பார்த்து காட்டுக்கே ராஜாவான சிங்கம் பயந்து ஓடியது.
அது மட்டும் இல்லாமல் அருகிலே வந்த எருமைக் கூட்டம் மெல்ல அடிபட்டுக் கிடந்த ஒரு எருமையை எழுப்பி விடுகிறது. அந்த எருமை அந்த எருதுக்கூட்டத்தோடு நகர்ந்து சென்றுவிட்டது. கடைசியில் எல்லா எருமைகளும் போன பின்பு, தான் ஏற்கனவே அடித்துப் போட்டிருந்த இன்னொரு எருமையை சிங்கங்கள் சாப்பிடத் தொடங்கின. காட்டுக்கே ராஜா, எருது கூட்டத்தைப் பார்த்து பயந்து ஓடும் இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.