Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும் இது பொருந்தும். சாலை விபத்து எப்போது நடக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாதது. என்னதான் நாம் சாலையில் பார்த்து கவனமாக வாகனத்தை ஓட்டினாலும் எதிரே வருபவர் ஒழுங்காக வாகனத்தை ஓட்டுகிறாரா என்பதைப் பொறுத்துத்தான் நம் சேப்டியும் இருக்கிறது.இங்கே ஒரு விபத்து சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
பொதுவாகவே லாரிகளில் ஓவர் லோடு ஏற்றுவது தப்பான விசயம் தான். அவ்வப்போது, அப்படி ஏற்றப்படும் வாகனங்களை பிடித்து அபராதமும் வசூலித்து வருகின்றனர். ஆனாலும் கூடுதலாக ஒருமுறை ட்ரிப் அடிக்க சோம்பல் பட்டுக்கொண்டு பல லாரிகளிலும் ஓவர் லோடு ஏற்றப்படுகிறது. இங்கும் அப்படித்தான் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அதன் பின்னாலும், பக்கவாட்டில் அந்த முந்திக்கொண்டும் பலரும் சென்று கொண்டிருந்தனர் டூவீலர்களில்.
ஓவர் லோடினால் கொஞ்சம் சரிந்தே போன அந்த லாரி ஒருகட்டத்தில் நிலைகுலைந்து சரிந்து விழுந்தது.பின்னால் வந்த வாகனங்கள் சுதாகரித்துக்கொண்டு ஒதுங்கிக் கொண்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த வீடியோவைப் பார்க்கும் எவர் ஒருவரும் ஓவர் லோடு ஏற்றிச்செல்லும் வண்டியின் பின்னாலோ, பக்கவாட்டிலோ செல்லாதீர்கள். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள்.