கிளிநொச்சியில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது

அனுமதியின்றி அரச மதுபானத்தை விற்பனை செய்த இருவரை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் இவ்வாறு அரச மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 8 போத்தல் மதுபானம், 22 பியர் ரின்கள், கால் போத்தல் மதுபானம் நான்கு போன்றவற்றை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.