முதலையிடம் சிக்கி காணாமல்போன பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு!

முதலையிடம் சிக்கி காணாமல்போன பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு!

நில்வளா கங்கையில் முதலையிடம் சிக்கி காணாமல்போன பொலிஸ் அதிகாரியின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரியின் கையடக்க தொலைபேசி கங்கையில் விழுந்ததை தொடர்ந்து அதை அவர் எடுப்பதற்காக முயற்சித்துள்ளார்.

இதன்போது தொலைபேசியை மீட்டு கங்கையிலிருந்து கரைக்கு வெளியேற முற்பட்டபோது வழுக்கியதில் முதலையொன்று அவரைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளது.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலை அடுத்து 300 மீற்றர் தொலைவில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

54 வயதுடைய 04 பிள்ளைகளின் தந்தையான, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.