Kilinochchi NET

தாயின் கடைசி ஆசை… இப்படியொரு ஆசையா? 3 மணிநேரத்தில் பெண் பார்த்து திருமணம் செய்த 40 வயது வாலிபர்..!

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்!மனிதர்கள் மட்டும் தான் தங்கள் குழந்தைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. நம் வீட்டுப் பக்கத்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை. அதுதான் தாய்ப்பாசம்! சகல ஜீவன்களிலும் தங்கள் தாயை நேசிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். இங்கே ஒரு 40 வயது வாலிபர் தாய் பாசத்தில் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி, அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்..

விழுப்புரம் நகரின் திருக்காமு நகரைச் சேர்ந்தவர் தயாளன். பனையபுரம் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதிவறை எழுத்தராக இருக்கிறார். இவருக்கு 40 வயது ஆகிறது. ஆனாலும் திருமணம் செய்துகொள்ளவில்லை, தன் தாய் முத்தாலம்மாளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் முத்தாலம்மனுக்கு திடீர் என கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிகிட்சை பெற்றுவருகிறார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் முத்தாலம்மாள், உன் திருமணத்தை என்னால் பார்க்க முடியவில்லையே என அழுது இருக்கிறார். இந்நிலையில் தன் அம்மாவின் அழுகையைப் பார்த்த தயாளன், தன் தாய் மாமன் கோனனூரை சேர்ந்த ஏழுமலையிடம் இதைச் சொன்னார். கூடவே அவரது மகள் காயத்ரியை பெண் கேட்டார். அவரும் சம்மதிக்கவே மூன்றே மணிநேரத்தில் இவர்களது திருமணம் நடந்தது. அதிலும் இந்த அரசு மருத்துவமனையின் நுழைவு வாயில் பகுதியில் இருக்கும் அம்மன் கோயிலில் தான் தம்பதிகள் மாலை மாற்றிக் கொண்டனர்.

கல்யாணம் முடிந்த கையோடு தன் அம்மா முத்தாலம்மனிடம் ஆசிவாங்கச் சென்றார். ஆனால் கோவிட் விதிமுறைகள் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கவில்லை. இதனால் செவிலியர்கள் மூலம் இந்தச் செய்தியை சொல்லி அனுப்பினார். கரோனா தொற்றில் ஆபத்தான நிலையில் இருக்கும் முத்தாளம்மனுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதேநேரம் தாயின் ஆசையை நிறைவேற்ற 40 வயதில் மணம் முடிந்த தயாளனுக்கும் வாழ்த்துகள் குவிகிறது.