Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கடந்த ஆண்டில் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் அடித்த படம் என்றால் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தான். அதில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் வேற லெவல் ஹிட் என்றே சொல்லிவிடலாம்.தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்றே அவரை சொல்லிவிடலாம். இளையதளபதி என அவரை ரசிகர்கள் உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டினர். இப்போது தளபதியாக்கி ரசிக்கின்றனர்.இயக்குனர் சந்திரசேகரின் மகன் என அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது, எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே ஏன் வீடே இல்லை என்றே சொல்லலாம். விஜயோடு ஒரு காட்சியில் நடித்தால் கூட பெரிய அளவில் ரீச் ஆகிவிடலாம் என்னும் சூழல் இருக்கிறது. அதேபோல் தமிழகத்திற்கு இணையாக கேரளத்திலும் விஜய்க்கு கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அந்தவகையில் எப்போதுமே கேரளத்திலும் விஜய் படங்களுக்கு பெரிய அளவில் பேன்ஸ் உண்டு. அந்தவகையில் கேரளத்தைச் சேர்ந்த பிரவீனா என்ற பெண், தனது உறவினர் ஒருவரின் கல்யாணத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கே வாத்தி கம்மிங் பாடல் ஒலித்துள்ளது. அந்த பாட்டைக் கேட்டதும் பலரும் எழுந்துநின்று ஆடியிருக்கிறார்கள்.
அப்போது பிரவீனா ஆர்வமிகுதியில் தான் அமர்ந்திருந்த ஷேரில் இருந்தே வாத்தி கம்மிங் பாடலுக்கு ஸ்டெப் போட்டிருக்கிறார். இதை அவருக்கேத் தெரியாமல் யாரோ செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய அதில் இளம்பெண் பிரவீனாவின் க்யூட் ரியாக்சன் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.