Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனச் சொல்வார்கள். சிலர் என்னதான் பார்த்து, பார்த்து நல்ல நாளில் திருமணம் செய்தாலும் தம்பதிகளுக்குள் ஒத்துப்போகா விட்டால் மண வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும்.சில ஆண்கள் மிக, மிக நல்லவர்களாக இருப்பார்கள். பீடி, சிகரெட், புகையிலை, தண்ணீர் என எந்த கெட்டபழக்கமும் இருக்காது. ஆனால் அவர்களுக்கு வரும் மனைவிகள் அவர்களுக்குத் தொல்லையாக மாறிவிடுவது உண்டு. அதனால் தான் நல்ல மணவாட்டியைத் தேர்ந்தெடுப்பது நம் கையில் இல்லை எனச் சொல்கிறார்கள். அது ஒருவகையில் இறைவன் போடும் முடிச்சு என்றே சொல்லிவிடலாம்.
இங்கேயும் அப்படித்தான். ஒரு மணப்பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் திருமணம் முடிந்தது. தாலிகட்டிய கையோடு இருவரும் மணப்பந்தியில் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டனர். வழக்கமாகவே திருமண பந்தியில் தம்பதிகள் ஒருவருக்கு, ஒருவர் சாப்பாட்டை ஊட்டிவிடுவது வழக்கமான ஒன்றுதான். இங்கேயும் போட்டோகிராபர்கள் மணப்பெண்ணிடம் மாப்பிள்ளைக்கு ஊட்டிவிடும்மாறு சொன்னார்.
உடனே கல்யாணப் பெண் ஒரு ஸ்வீட்டை எடுத்து மாப்பிள்ளைக்கு ஊட்டுவது போல் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். போஸ் கொடுத்து முடிந்ததும், மிகவும் எரிச்சலுடன் அந்த ஸ்வீட்டை மாப்பிள்ளையில் இலையிலேயே போடுகிறார்.பதிலுக்கு மாப்பிள்ளையோ
கோபப்படாமல் பக்குவமாக போட்டோவுக்கு சிரித்தபடியே போஸ் கொடுக்கிறார். இப்படி எரிச்சலான மனைவியை கட்டிக்கொண்டு இந்த மாப்பிள்ளை என்னவெல்லாம் கஷ்டப்படப் போகிறாரோ? என இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ