கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம்! சாரதி தப்பியோட்டம்

கிளிநொச்சி ஏ-9 வீதியின் அறிவியல் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஏ-9 வீதியின் அறிவியல் நகர் தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் இன்று பாதசாரிகள் கடவை ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட ஒருவர் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த இளைஞர் அவசர அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் காயமடைந்த நிலையில், தப்பி சென்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.