Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.
இங்கே ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அப்படி அந்த பொடியன் என்ன செய்தான் எனக் கேட்கிறீர்களா? கேரளத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கே, பொடியன் ஒருவன் முதன் முதலாக எல்.கே.ஜிக்கு பள்ளிக்கூடத்திற்குச் செல்கிறான். அவனை அவனது அம்மா பள்ளி வாசலில் விட்டு விட்டு,
உம்மா(முத்தம்) கொடு எனக் கேட்டு கொஞ்சுகிறார். பையனோ, அந்த நேரம் அந்த வழியாக வந்த மாணவியைப் பிடித்து நிறுத்தி கன்னத்தில் பசக்கென முத்தம் கொடுக்கிறான். உடனே அம்மா, எனக்கு முத்தம் கேட்டேண்டா! என சிரிக்கிறார். யாரு பாஸ் இந்த பொடியன்? எதிர்காலத்தில் நம்ம கமல்ஹாசனையே ஓவர்டேக் செஞ்சிடுவார் போல என நெட்டிசன்கள் இதை கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…