கொழும்பில் உணவகங்களில் உணவு பெறுவோருக்கான தகவல்

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரிப்பதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக அரிசி, மரக்கறி, மீன், கடுவாடு, தேங்காய், முட்டை மற்றும் கிழங்கு உட்பட உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஹோட்டல் மற்றும் சாப்பாட்டு பொதிகள் விற்பனை செய்யும் கடைகளிலும் நேரத்திற்கு ஏற்ப விலை அதிகரிப்பதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் அரச மற்றும் தனியார் நிறுவனத்தில் சேவை செய்யும் ஊழியர்கள் இதனால் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அரிசி விலை 105 – 120 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

90 ரூபாயில் விற்பனையாகிய வெங்காயம் 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இவ்வாறு அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சாதாரண மரக்கறி உணவு பொதி 130 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கோழி இறைச்சி சோற்று பொதி 180 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.