Kilinochchi NET

பிக்பாஸ் வீட்டில் அமீரின் முத்தம்.. அன்றிரவு நடந்தது என்ன? போட்டுடைத்த பாவனி

பிக்பாஸ் வீட்டில் அமீரின் பாவனி

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, அமீர் தனக்கு முத்தம் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார் பாவனி.

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5ல் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து சிறப்பாக விளையாடியவர் அமீர்.

இந்நிகழ்ச்சியில் பாவனிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்தார் அமீர், ஆனால் பாவனியோ காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.

தம்பி எனவும் அழைத்து வந்தார், அப்போது ஒருநாள் இரவில் அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்ததாக வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

இதுபற்றி சமூகவலைத்தளங்களிலும் பலரும் விமர்சித்த நிலையில், விளக்கம் அளித்துள்ளார் பாவனி.

அவர் கூறுகையில், என்னை வைத்து தான் அமீர் பிரபலமானார் என்று சொல்வதெல்லாம் தவறு. அவர் திறமையாக விளையாடினார்.

என்னால் தான் அமீருக்கு நிறைய நெகட்டிவ் கமெண்ட்டுகள் வருகிறது. உண்மையை சொல்லப்போனால், அவர் என்னிடம் காதல் சொல்லும் போது எனக்கு வெக்கமாக இருந்தது.

அதோடு எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று தெரியவில்லை. அதனால், நான் சும்மா விளையாட்டுக்காக தம்பி என்று சொன்னேன்.

அன்று இரவு என்ன நடந்தது என்றால், அவர் என்னிடம் ஐ லவ் யூ சொல்ல கிட்ட வந்தார். ஆனால், அதை இவர்கள் எடிட் செய்து வேற மாதிரி காண்பித்து விட்டார்கள். உண்மையாக அமீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இதை தான் மக்கள் சர்ச்சையாக்கி வருகிறார்கள்.

உண்மையில் அது முத்தம் கிடையாது. அவர் என்னிடம் கிட்டே வந்து ஐ லவ் யூ என்று மெதுவாக சொன்னதுதான் என்று கூறினார்.