உலகளாவிய ரீதியில் கொரோனாவால் சுமார் 30 மில்லியன் மக்கள் பாதிப்பு

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோவிட் தொற்றால் உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த 30,034,508 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றின் காரணமாக உலகளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் 954,092 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

உலகில் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கவும், இந்தியாவும் பதிவாகியுள்ளன.

இருநாடுகளிலும் முறையே 201,348,83,230 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. இலங்கையில் இதுவரையில் 3271 தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 13 பேர் தொற்றுக்காரணமாக உயிரிழந்துமுள்ளனர்.

இருந்த போதிலும் இலங்கையில் நேற்றைய தினத்தில் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்