கிளிநொச்சிக்கு விஜயம் செய்து விவசாய உற்பத்திகளை பார்வையிட்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் திராட்சை உள்ளிட்ட விவசாய ஆராய்ச்சிகளை பார்வையிட்ட குறித்த குழுவினர் அங்கு காளான் வளர்ப்பு ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தினையும் திறந்து வைத்துள்ளனர்.

இதன்போது அங்கு புதிதாக ஆராய்ச்சி செய்யப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் தானிய உற்பத்திகளும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் அரசகேசரி தலைமையில்இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, பண்டைய மேம்பாடு மற்றும் முட்டை சார்ந்த தொழில் அமைச்சர் டி.பி கேரத், நெல் மற்றும் தானியவகைகள் சேதன உணவுகள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, நாடாளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், திணைக்களங்கள் சார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.