கிளிநொச்சியிலும் விதிக்கப்பட்டது தடை

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்ற தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் நினைவு நிகழ்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நிகழ்வுகளை நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1304 /20 என்ற வழக்கின் பிரகாரம் 15.9.2020 தொடக்கம் 28.09.2020 வரையான நாட்களில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வையும் அல்லது ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களையும் நடத்தக்கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.