Kilinochchi NET

உங்களுக்கு எந்த டிரஸ் போட்டாளும் சும்மா நச்சுன்னு இருக்கு – அனகா Latest stills

மலையாள பிரபலமான நடிகை அனகா, ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான “நட்பே துணை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இப்படத்திற்கான “SIIMA Best Debutant Actress 2021(Tamil)” விருதினையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து, நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிக்கிலானா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றபோதிலும், இதில் இடம் பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் இன்னும் ஒலித்துக் கொண்டு வருகிறது. இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி அவர்களின் குரலில் 1990ம் ஆண்டு வெளியான ‘மைக்கேல் மதனக் காமராஜன்’ படத்தில் இடம் பெற்ற இப்படம் ரீமிக்ஸ் செய்யப்பட்டு மீண்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில், ‘காதல் மன்னனா..’ என வரும் சில வரிகளுக்கு அனகா போட்ட டான்ஸ் மூவ்ஸ் சமூக வலைத்தளம் எங்கும் இன்னும் வைரலாகி வருகிறது. இதனால், ஒரே பாட்டின் மூலம் தென்னிந்திய பேமஸ் ஆகியுள்ளார் அனகா. இதனை கைவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் விட்டு ரசிகர்கள் தன்வசம் கட்டிவைக்க முயற்சித்து வருகிறார்.