Kilinochchi NET

எப்டி பாத்தாலும் எல்லா போஸ்’லயும் அழகு அள்ளுது.. திணறடிக்கும் நிவேதா பெத்துராஜ்..

2016ம் ஆண்டு தினேஷ், மியா, ரித்விகா உள்ளிட்டார் நடிப்பில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதனைத் தொடர்ந்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அடுத்து தமிழில், எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வந்த நிலையில், சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

சினிமாக்களில் மட்டுமல்லாது ரசிகர்கள் மத்தியிலும் டாப் பொசிஷனை பிடித்திருக்கும் நிவேதா, தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மனதில் தனக்கென்ற தனி இடத்தை தக்க வைத்து வருகிறார்.