Kilinochchi NET

குட்டி ஆடையில் அழகை அன்லிமிட்டாக காட்டிய ரெஜினா..

நடிப்பு மற்றும் கவர்ச்சியின் மூலம் தமிழ், தெலுங்கு, பாலிவுட் என தன் வசம் கவர்ந்த நம்ம சென்னை பொண்ணு ரெஜினா கசாண்ட்ரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதற்கு முன்பாக கண்ட நாள் முதல், அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர், ராஜதந்திரம், மாநகரம் போன்ற நல்ல கதைகளம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். சந்திரமௌலி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்து வந்த ரெஜினாவிற்கு தமிழில் மார்க்கெட் சிறிது குறையவே, தெலுங்கில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க தெலுங்கு திரையுலகம் பக்கம் ஒதுங்கிவிட்டார்.

அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்கு பின்னர், செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, நந்திதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து, வெப் சீரிஸ்களில் ஆர்வம் காட்டி வந்த இவர், தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் வாய்ப்புகள் தேடி வருகிறார்.