கொழும்பில் முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தெப்பானம பிரதேசத்தில் நேற்று மாலை உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 29 வயதுடைய ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மரணத்திற்கு காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.