இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் தகனம்!

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்த 13வது நபரின் இறுதி கிரியைகள் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிலாபம் பிரதேச சபைக்கு சொந்தமான மாதம்பே மாயனத்தில் இறுதி கிரியைகள் இடம்பெற்றன.

பஹ்ரைனில் இருந்து கடந்த 02ம் திகதி வந்த குறித்த நபர் சிலாபம், அம்பகஹவில தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவரே இன்று உயிரிழந்தார்.

கடந்த 9ம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே, குறித்த நபரின் இறுதி கிரியைகள் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளன.