Kilinochchi NET

எல்லா ஆர்ட்டினும் உனக்குதான்!…புடவையிலும் ஹாட்டா போஸ் கொடுத்த பீஸ்ட் பட நடிகை….

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் 2வது கதாநாயகியாக நடித்திருப்பவர் அபர்ணா தாஸ். இவர் கேரளாவை சேர்ந்தவர். சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஸ்டைலான லுக்கில் விஜய் டிரம்ஸ் வாசிப்பது போலவும், அபர்ணா ஒரு இசைக்கருவியை வாசிப்பது போலவும் ஒரு புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அந்த புகைப்படம் வெளியான பின்னர்தான் அபர்ணா இப்படத்தில் நடிப்பதே ரசிகர்களுக்கு தெரிய வந்தது.

தற்போது அபர்ணாவும் மற்ற நடிகைகள் போல போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர துவங்கியுள்ளார்.

அந்த வகையில் புடவை கட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி மாறியுள்ளது.