கிளிநொச்சி ஏ9 வீதியில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட கசிப்பு மீட்பு ; இருவர் தப்பியோட்டம்

கிளிநொச்சி ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு வீதியின் முரசுமோட்டை பகுதியில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிசார் சட்டவிரோத கசிப்பு கொண்டு சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் சுமார் முப்பதாயிரம் மில்லி லீற்றர் வரையான கசிப்பினையும் மீட்டுள்ளனர்

கிளிநொச்சி ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு வீதியின் முரசுமோட்டை பகுதியில் இன்று (14-09-2020) மதியம் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிசார் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த

சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றினை வழி மறித்த சமயம் பொலிசாரின் சைகையை மீறி தப்பி ஓடியதையடுத்து அதனைத் துரத்திச் சென்ற போது குறித்த இருவரும் முரசுமோட்டை அணைக்கட்டு வீதிக்கச் சென்று தப்பியோட முடியாமல் மோட்டார் சைக்கிளையும் அவர்கள் கொண்டுவந்த கசிவையும் கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து பொலீசார் இவர்களால் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலித்தீன் பை ஒன்றிலும் பாடசாலை புத்தகப் பை ஒன்றிலும் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட கசிப்பினையும் மீட்டுள்ளனர்.