கிளிநொச்சியில் தனியார் கல்விநிலையத்தில் மாணவன் மீது கொடூர தாக்குதல்

கிளிநொச்சியில், தனியார் கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான மாணவர் தற்போது தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதல் நடத்திய ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது