அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஸ்ரீலங்காவின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

இதன்படி, சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்துவரும் மணித்தியாலங்களில் இடைக்கிடையே மழை பெய்யலாம்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் மூடிய மழைபெய்யும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும் மணிக்கு 50 கிலோமிற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் தொடர்பில் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.