Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கெட் ரெடி For கெட்டிமேளம்… மகிழ்ச்சியின் உச்சத்தில் பெண் பிரபலம்!

பிரபல தொகுப்பாளினியாக நக்ஷத்திரா நாகேஷ் வானவில் , ஜோடி நம்பர் 1 , சன் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதோடு வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, திருமகள், நாயகி, தமிழும் சரஸ்வதியும் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும், சேட்டை, வாயை மூடி பேசவும், இரும்புக்குதிரை, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கும் நக்ஷத்திரா நாகேஷ் தனது நீண்ட நாள் காதலரான ராகவ் என்பவரை கரம் பிடிக்கவுள்ளார்.

திருமண முன் ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தற்போது கெட் ரெடி For கெட்டிமேளம் என கேப்ஷன் கொடுத்து நலங்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.