Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

நூடுல்ஸ் மண்ட லிஸ்ட்ல சேர்த்துரலாம்!… அதிர்ச்சி கொடுத்த மாநாடு ஹீரோயின்

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் அறிமுகமானவர் கல்யாணி பிரியர்ஷன். மலையாளம் மற்றும் தமிழில் பல ஹிட் படங்களை இயக்கிய பிரியதர்ஷனின் மகள் இவர். ஹீரோ படத்தில் நடிக்கும் முன்பே 3 தெலுங்கு படங்களில் நடித்துவிட்டார்.ஹீரோ படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கதில் சிம்பு நடித்த மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இப்படம் முடிய 3 வருடங்கள் ஆகிவிட்டது. புத்தம் புது காலை என்கிற படத்திலும் நடித்துள்ளார். அதேபோல், அப்பா பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான மரக்கார் அரப்பிக்கடலிண்டே சிம்ஹம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது சில மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

சிம்புவுடன் இவர் நடித்த மாநாடு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அப்படத்தில் கல்யாணியின் நடிப்பு பல இயக்குனர்களையும் கவர்ந்துள்ளதால் இவர் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், திடீரென தனது அழகான முடியை வித்தியாசமான ஹேர் ஸ்டைலுக்கு மாற்றி அப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ‘அப்புறம் என்னப்பா..நூடுல்ஸ் மண்ட லிஸ்ட்ல இத சேர்த்திடலாம் இல்ல’ என கிண்டலடிக்க துவங்கியுள்ளனர்.